×

பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றாதவர்களிடம் 62,87,281 அபராதம் வசூல் 208 சிறப்பு முகாம் மூலம் 19,580 பேருக்கு தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 208 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 19,580 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர், வணிகவரித் துறை முதன்மை செயலாளர் சித்திக் தலைமையில் மண்டல கள ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ஏப்ரல் 1ம் தேதி முதல் முதல் மே 18ம் தேதி வரை 15,137 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 8,41,806 நபர்கள் பயனடைந்துள்ளார்கள். இவர்களில் 24,745 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதைனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 17ம் தேதியன்று ஒருநாள் மட்டும் 19,205 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை நாளொன்றுக்கு 25,000 என்கின்ற அளவிற்கு அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கை அமல்படுத்த சென்னை மாநகராட்சியின் சார்பில் காவல் துறையினருடன் இணைந்து 30 ஊரடங்கு அமலாக்கக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 9.4.2021 முதல் 17.5.2021 வரை அரசின் வழிமுறைகளை பின்பற்றாத 382 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடமிருந்து 1,62,87,281 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 17.5.2021 அன்று ஒருநாள் மட்டும் 208 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 19,580 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதைத்தல், தகனம் செய்வதில் குறை இருந்தால் புகார் தெரிவிக்கலாம்
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்  சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 199 இடங்களில் மயானபூமி உள்ளது. இதில் 37 இடங்களில் 41  எரிவாயு  மற்றும் மின் தகனமேடைகள் இயங்கி வருகின்றன. இலவச அமரர் ஊர்தி சேவையை பெற 155377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அமரர் ஊர்தியில் உடலை கொண்டு செல்லவோ, அடக்கம், தகனம் செய்வதற்கோ யாரேனும் பணம் கேட்டாலோ, மயானங்களில் சேவை குறைபாடு இருந்தாலோ 044-2538 4520 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார்கள் குறித்த தகவல்கள் மற்றும் வீடியோ பதிவுகளை 94983 46900 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

Tags : Corporation Commissioner ,Kagandeep Singh Bedi , 62,87,281 fines collected for non-compliance with security measures 198,580 vaccinated through 208 special camps: Corporation Commissioner Kagandeep Singh Bedi
× RELATED தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்...